மழலைச் சொல்

Monday, March 20, 2006

பெரிய்ய படம்

அம்மாவும், அப்பாவும் ஒரு ஆச்சரியமான இடத்துக்கு என்னைக் கூட்டிக் கொண்டு போனாங்க. எந்த இடம்னு தெரிஞ்சுக்க எனக்கு ரொம்ப ஆர்வமா இருந்துச்சு. ஆனா அவங்க எங்கிட்ட அதைச் சொல்லலை. அங்க போனா நானே தெரிஞ்சுக்குவன்னு சொல்லிக் கூட்டிக் கொண்டு போனாங்க. அந்த இடத்துக்குள்ள நுழைஞ்சதும் நிறைய விளக்கெல்லாம் இருந்துச்சு. ஒரு பாப்கார்ன் கடை இருந்துச்சு. வாசம் அடிச்சது. அம்மா போயி சீட்டு வாங்கிட்டு வந்தாங்க. நாங்க ஒரு அரங்கத்துக்குள்ள போனம். அங்க நிறைய்ய நாற்காலிகளும், ஒரு பெரிய்ய திரையும் இருந்துச்சு.

கொஞ்ச நேரத்தால அந்தத் திரையில க்யூரியஸ் ஜார்ஜ் வந்தார். மஞ்சள் தொப்பிக் காரரும் வந்தார். அந்தப் படத்துல ஒரு பெரிய காவலாளி வந்து மோப்பம் பிடிச்சுப் பாத்தார். அவரைப் பாத்தப்ப எனக்கு பயமா இருந்துச்சு. வீட்டுக்குப் போகணும்னு இருந்துச்சு. அம்மா மடியில போயி உக்காந்துட்டேன். அப்புறம் பயமாயில்ல. பிறகு ஒரு பாட்டி வந்து வ்வ்வாஆஆ...அப்படின்னு பாட்டுப் பாடினாங்க. ஜார்ஜ் வந்து கலரெல்லாம் எடுத்து சுவத்துல தெறிப்பாங்க. அப்புறம் ஜார்ஜ் ஒரு மியூசியத்துல போயி டைனசோர் எலும்புல ஏறி, கீழ தள்ளிருவாங்க.

இதெல்லாம் இருக்கும். அதான் க்யூரியஸ் ஜார்ஜ் படம். ஜார்ஜ் நிறைய சிரிப்பு காமிப்பாங்க. படம் முடிஞ்ச பிறகு அப்பா அந்தத் திரைக்குப் பக்கத்துல கூட்டிட்டு போயி காமிச்சாங்க. நா அது மாதிரி பெரிய்ய திரைய பாத்ததே இல்ல.

3 Comments:

Anonymous Anonymous said...

a good to read blog.
CG is good except for the american swindling of the african Zagawa or whatever!

1:01 AM  
Blogger Thangamani said...

அன்புக்குழந்தைக்கு என் அன்பான அன்பு.

1:38 AM  
Blogger இளங்கோ-டிசே said...

நானும் போன கிழமைதான் எங்கடை அண்ணாவின் மகனோடு (உங்களை மூன்று வயது அதிகம்) போய் Curious George பார்த்தேன். படத்தைவிட உங்களை மாதிரி மழலைகளின் சிரிப்பை திரையங்கில் இரசிப்பது இன்னும் அழகாய் அல்லவா இருக்கும் :-)?

10:34 AM  

Post a Comment

<< Home