பறக்குது பார்! பறக்குது பார்!
நா ஒரு படம் கீறினேன், அதான் இது. இது அம்மா எனக்குச் சொல்லித் தந்த பாட்டு. இந்தப் பாட்டை அம்மா சின்னப் பிள்ளையா இருக்கும் போது படிச்சாங்களாம், அப்புறம் அந்தக் கா....லத்துல அப்பாவுக்குப் படிச்சாங்களாம், நா சின்னக் குஞ்சா இருந்தப்ப என்னை நித்திரைக்குப் போடவும் படிச்சாங்களாம்.
வண்ணத்துப் பூச்சி, வண்ணத்துப் பூச்சி
பறக்குது பார்! பறக்குது பார்!
அழகான செட்டைகள், அழகான செட்டைகள்
அடிக்குது பார்! அடிக்குது பார்!
பூக்கள் மேலே, பூக்கள் மேலே
பறந்து போய், பறந்து போய்
தேனைக் குடித்து, தேனைக் குடித்து
களிக்குது பார்! களிக்குது பார்!
சிவப்பு, மஞ்சள், கறுப்பு, வெள்ளை
பொட்டுக்கள் பார்! பொட்டுக்கள் பார்!
தொட்டதும் விரலில், தொட்டதும் விரலில்
பட்டது பார்! பட்டது பார்!
5 Comments:
/அப்புறம் அந்தக் கா....லத்துல அப்பாவுக்குப் படிச்சாங்களாம்/
அண்ணே அண்ணே மழலையண்ணே, அது ஒரு கனாக்காலமா எண்டு ஒருக்கால் அம்மாட்டையோ அப்பாட்டையோ கேட்டுச் சொல்லுங்கோ ;-)
அழகான பாட்டு மழலை!
என்ன கொஞ்சம் நாட்களா ஒண்ணும் பதியலை?
வண்ணத்துப்பூச்சி! எந்த ஓவியனிடம் வண்ணங்களை வாங்கி வந்தாய்?
உங்க படம் ரொம்ப நல்லாயிருக்கு மழலை. நான் கூட உங்க வயசில இந்த மாதிரியல்லாம்
படம் வரைவேங்க. நிறைய படங்கள் வரையுங்க. உங்க பாட்டும் நல்லா இருந்தது.
அன்புடன்
சாம்
நல்ல படமா இருக்கு மழலை. வண்ணத்துப்பூச்சி படமும் பாட்டும் அருமை.
நா இப்பதா வெளியில போய், கடைக்கெல்லாம் போய்ட்டு வர்றேன்.
@அது ஒரு கனாக்காலமா@
இப்பயும் அம்மாகிட்ட, அப்பா 'பாட்டு' கேக்குறார் :D
@எந்த ஓவியனிடம்@
எங்கிட்டதா திரு சகா!
@நான் கூட உங்க வயசில இந்த மாதிரியல்லாம்
படம் வரைவேங்க.@
சம் சகா, ஏன் இப்ப வரய மாட்டிங்களா?
@குடும்பத்துல குழப்பம்.....பண்ண.....!!!@
இனிமேத்தானா சாரா சகா:D
பொன்னார்மணியன் சகா, அதுக்குத் தலை இல்லாததை ஏன் யாரும் சொல்ல மாட்ரீங்க? :D
Post a Comment
<< Home