வாழைப்பழத் தோல்
அம்மாவும் அப்பாவும் நானும் இரவுச் சாப்பாடு சாப்பிட்டு முடிச்சப்புறம் பழம் சாப்பிடலாம் எண்டு சொல்லி, எல்லாரும் வாழைப்பழம் சாப்பிட்டோம். சாப்பிட்டு முடிச்சதும் தோலைக் கீழ போட்டுட்டேன். அப்போ அப்பா, வாழைப்பழத் தோலைக் குப்பையில போடணும் எண்டு சொன்னாங்க. அதுக்கு ஒரு கதையும் சொன்னாங்க. எப்படின்னா,
ஒரு நா ஒரு பையன் வாழைப்பழத் தோலைக் கீழ போட்டுட்டாராம். அவங்க அப்பா அது வழியா நடந்து வந்தாங்களாம். தோல் கீழ கிடந்தது தெரியாம அந்த அப்பா, அது மேல காலை வச்சு சர்ர்ருன்னு வழுக்கி தொபுக்கடீர்ன்னு விழுந்துட்டாங்களாம். அப்புறம் அடி பட்டு மருத்துவர்கிட்ட கூட்டிட்டுப் போனாங்களாம். அதுனால தோலைக் கீழ போடக் கூடாது எண்டு அப்பா சொன்னாங்க.
கதையெல்லாம் உம் உம்முன்னு கேட்டுப்போட்டு, அப்பாகிட்ட கேட்டேன், "குரங்கெல்லாம் வாழைப்பழத் தோலை எங்க போடும்?" அம்மாவும், அப்பாவும் சிரிச்சாங்க. அப்பா, "குரங்கெல்லாம் மரத்திலேயே தாவி தாவி பாய்ஞ்சு போறதால கீழ போட்டாலும் பிரச்சனை இல்ல; அதோட, அது கையையும் ஊண்டிக் கொண்டு நாலு கால் மிருகம் மாதிரிதான நடக்கும், அதனால வழுக்கி விழாது. ஆனா மனுசங்க ரெண்டு காலால நேராத்தான நடக்குறாங்க, அதனால வழுக்கி விழுந்துருவாங்க," எண்டு சொன்னாங்க. அப்புறம் அப்பாவே தோலை எடுத்துக் குப்பையில போட்டுட்டாங்க!
7 Comments:
//குரங்கெல்லாம் வாழைப்பழத் தோலை எங்க போடும்?//
இது கேள்வி!!!
-மதி
//குரங்கெல்லாம் வாழைப்பழத் தோலை எங்க போடும்?//
அடடே! தம்பி நம்மள மாதிரிதான் போல இருக்கு!
:) சகாஸ்!
மதி சகா, உங்கட இமெய்ல் தருவிங்களா, உங்கட்ட ஒரு சேதி சொல்லோணும். நீங்க நினைக்கிற ஆள் நான் இல்ல.
ஆமாடா செல்லம்! வாழைப் பழத்தோலை வழியில போடறதெல்லாம் தப்புதான்.
வழுக்கிவிட்டு விழுறவங்க பாவம்தான?
//குரங்கெல்லாம் வாழைப்பழத் தோலை எங்க போடும்?//
:-)
(இதன் நகல்:
http://commentsofshibi.blogspot.com/2006/02/blog-post.html)
// "குரங்கெல்லாம் வாழைப்பழத் தோலை எங்க போடும்?"//
அதோட வாயில் போடும்....
மழலை...குரங்கு வாழப்பழத்தை அப்படியே லபக்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.
//"குரங்கெல்லாம் வாழைப்பழத் தோலை எங்க போடும்?"//
:D சபாஸ் சரியான கேள்வி! மழலைன்னா மழலை தான் :)
@மழலை...குரங்கு வாழப்பழத்தை அப்படியே லபக்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.@
கொஞ்சம் ஆதாரம் காட்டிச் சொல்லுங்கோவென் ராகவன் சகா!
Post a Comment
<< Home