பிரியாணி செய்யத் தெரியுமா?
அம்மாவும் நானும் அப்போ அப்போ அமைதியா இருக்கிற விளையாட்டு விளையாடுவோம். அப்படினா என்னண்டு கேக்குறிங்களா அதுதான் quiet time. நா குழப்படி ரொம்பப் பண்ணுனா இந்த விளையாட்டு விளையாடுவோம். அண்டைக்கும் விளையாடினோமா அப்போ அம்மா ஏதோ எழுதிக்கொண்டிருந்தாங்க. என்னெண்டு கேட்டேன். "Chicken பிரியாணி செய்யிறது எப்படிண்டு எழுதுறேன்," அப்படிண்டு சொன்னாங்க. அப்போ இப்படித்தான் செய்யிறது எண்டு நா சொன்னேன்,
"Biriyani rice,fry chicken, oil, chicken biriyaniக்கு chicken biriyani sauce, onion.
Cook and fry the chicken in the sauce.
Mix it with chicken and sauce and fish and gravy and some more fish and chicken.
And fry it with rice, fish, chicken and soup and biriyani.
And eat it with தயிர்.
Indain railways ல போகும் போது சாப்பிடலாம்," எண்டு சொன்னேன். அம்மா சிரிச்சிட்டு நா நல்ல சமையற்காரரா வருவேன் எண்டு சொன்னாங்க.
இதான் சித்தியாக்கள் ஒரு நா செஞ்ச இறால் பிரியாணி. (பிரியாணியை நீங்க சாப்பிட்டுட்டு படத்தை எங்களுக்கு அனுப்பினத்துக்கு நன்றி சித்தியாக்கள் :))
9 Comments:
அட நல்ல பிடியாணிதான் போல!
@பயந்துட்டீங்கலோன்னு@
என்ன சாரா சகா, என்னப் பார்த்தே இப்பிடிக் கேட்டுப்பிட்டிங்க:))
@அட நல்ல பிடியாணிதான் போல!@
நன்றி பார்த்திபன் சகா!
சகா,
இத்தனை நாளா இந்த வலைப்பதிவைப் படிக்காம விட்டுட்டமேன்னு இருக்கு.
நல்லா எழுதுறீங்க/சொல்லுறீங்க சகா.
உங்கள மாதிரியே ஒருத்தரை எனக்குத் தெரியும். அவருக்கும் ஏறக்குறைய உங்களுடைய வயதுதான்.
சந்தோஷமாக இருக்கு.
-மதி
மதி சகா, நீங்களும் என்னை மாதிரியே சின்னப் பிள்ளைத்தானா? உங்க படம் நல்லாயிருக்கு.
@உங்கள மாதிரியே ஒருத்தரை எனக்குத் தெரியும்.@
அவரையும் சேர்த்து எழுதச் சொல்லலாமில்லே, எனக்குத் துணையா இருக்கும்.
மழலை
நீங்கள் பிரியாணி செய்யும் போது படம் கண்டிப்பாகப் போடுங்கள். உங்கள் பதிவுக்கு வந்து
நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்று எப்போதும் பார்த்துப் போவேன். மனதுக்கு மகிழ்ச்சியாக
இருக்கும்.
நண்பர் செல்வன் என்னை நாலு என்ற சங்கிலிப் பதிவில் கோர்த்து விட்டார். நான் வரும் போது
பொழுது உங்களை அழைக்கப் போகிறேன். உங்களுக்குப் பிடித்த விசயங்களை நாலு நாலாகச்
சொல்லுங்கள்
அன்புடன்
சாம்
மயில் அனுப்புகிறேன்
நல்ல சமையற்காரனாய் வருவீங்களோ மழலை. நல்லது. பிரியாணியை நன்றாக சாப்பிடுங்கள்!
ஆகா! பிரியாணியப் பாத்ததுமே எச்சி ஊறுதே மழலை.....ம்ம்ம்...பெரிய பெரிய எறால் துண்டுகளப் பாத்ததுமே ஆசையா இருக்கு. ம்ம்ம்ம்....நானும் இந்த வாரக்கடைசீல பிரியாணி செய்யலாமான்னு தோணுது....
//மதி சகா, நீங்களும் என்னை மாதிரியே சின்னப் பிள்ளைத்தானா? உங்க படம் நல்லாயிருக்கு.
@உங்கள மாதிரியே ஒருத்தரை எனக்குத் தெரியும்.@
அவரையும் சேர்த்து எழுதச் சொல்லலாமில்லே, எனக்குத் துணையா இருக்கும். //
மழலை அண்ணே,
மனசில இன்னும் சின்னப்பிள்ளை எண்ட நினைப்பு இருக்கிறதால அந்தப் படம். மற்றபடிக்கு நீங்க என்ன சகா என்றாலும் சரி அத்தை/சித்தி என்றாலும் சரி.
-மதி
பிரியாணி செய்யும் முறை சூப்பர் மழலை. செய்து பாக்கணும் :)
உங்களை மாதிரி சின்னவங்க, ஒரு குட்டிதேவதை வலைப்பூ வச்சிருக்காங்க. இங்கே பாருங்களேன்
http://anjalisplace.blogspot.com/
Post a Comment
<< Home