நீங்க வச்சிருக்கீங்க
நா புது தாமஸ் ச்சூச்சூ ட்ரெயின் புக்ல படம் பாத்தேன். என்ன வாங்கலாம்னு பாத்தேன். எனக்கு ஒரு டீசல் வாங்கனும்னு விருப்பமா இருந்துச்சு. "தாமஸ் ச்சூச்சூ ட்ரெயின் கடைக்குப் போலாமா?"ன்னு அப்பாவைக் கூப்புட்டேன். "தாமஸுக்குத் தனியா கடையில்லை,"ன்னு அப்பா சொன்னார். அந்தப் புத்தகத்துல போன் நம்பர் இருந்துச்சு. நா போனை எடுத்துட்டு வந்து, "கால் பண்ணுவோம்,"னு சொன்னேன். "நீங்களே கூப்புடுங்க,"ன்னு அப்பா சொன்னார். "சரி, கூப்பிட்டு என்ன கேப்பீங்க?"ன்னு அப்பா கேட்டார். "i want buy one dieselன்னு கேப்பேன்,"னு சொன்னேன். "காசு கேப்பாங்களே, என்ன செய்வீங்க?"ன்னு அப்பா கேட்டார். "நீங்க வச்சிருக்கீங்க,"ன்னு சொல்லிட்டு அப்பாவோட வாலட்டை எடுத்துட்டு வந்து காமிச்சேன். எல்லாரும் சிரிச்சாங்க. நானும் சிரிச்சேன்.
0 Comments:
Post a Comment
<< Home